வெப் தொடரில் நடிக்கும் சரத்குமார்.!உடன் நடிப்பது இந்த வில்லனா.?

Actor Sarathkumar is said to be next co-starring with Jegapathibabu in the web series.

நடிகர் சரத்குமார் அடுத்ததாக வெப் தொடரில் ஜெகபதிபாபுவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர்கள் உட்பட நடிகை,நடிகர்களும் ஓடிடி பக்கம் திரும்பி விட்டனர்.பலரும் வெப் தொடரில் நடிப்பதும் , இயக்குவதும் என்று இருந்து வருகின்றனர்.சமீபத்தில் கூட இயக்குனர்கள் இணைந்து பாவக்கதைகள என்ற பெயரில் ஒரு ஆந்தலாஜி வெப் தொடர் இயக்கி அது வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.தற்போது மணிரத்னம் தயாரிப்பில் நவரசா எனும் வெப் தொடர் உருவாகி வருவதும் , அதில் சூர்யா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்த சரத்குமார் வெப் தொடரில் நடிக்க உள்ளதாகவும் , தெலுங்கில் உருவாகவுள்ள இந்த வெப் தொடரில் தெலுங்கில் வில்லனாக நடிக்கும் ஜெகபதிபாபு ,கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.’கார்ஷானா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் ,தமிழிலும் இந்த வெப் தொடர் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.