இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் “வென்று தானிந்து காடு”. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக சிம்பு – கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளது.
unknown nodeஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக இந்த படம் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
unknown nodeஇந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான, “காலத்துக்கும்நீ வேணும்” பாடல் இன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.அதன்படி , தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் சிம்புவே படியுள்ளதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
unknown node