இந்த நேரத்தில தான் மாஸ்டர் வெளியாகுமாம் .! அமேசான் பிரைம் நிறுவனம் அறிவிப்பு.!

Amazon Prime has responded to a question from a fan about the timing of the release of the master film starring Vijay in

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தினை ஓடிடியில் வெளியிடும் நேரம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமேசான் பிரைம் நிறுவனம் பதிலளித்துள்ளது .

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை நாளை முதல் ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தினை இந்தியா மற்றும் 240 நாடுகளில் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வழியாக வீட்டிலிருந்தே கண்டு களிக்கலாம் என்று தெரிவித்திருந்தனர் . இந்த நிலையில் இந்த மாஸ்டர் படத்தினை ஓடிடியில் வெளியிடும் நேரம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமேசான் பிரைம் நிறுவனம் பதிலளித்துள்ளது .அதாவது மாஸ்டர் படத்தினை இந்திய நேரப்படி நாளை அதிகாலை 12 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node