இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களின் பேரதராடுவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
unknown nodePonniyin Selvan Movie Poster [Image Source: Google]
இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodePonniyin Selvan Poster [Image Source: Google ]
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படியுங்களேன்-எனக்கு சின்ன வயசுல இருந்தே அந்த மாதிரி ஒரு ஆசை இருக்கு.! ஓப்பனாக பேசிய இனியா.!
unknown nodePonniyin Selvan Poster [Image Source: Google ]
அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் நாட்கள் தீபாவளி விடுமுறை என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
History in the making ????????#PS1 ????️ hits a staggering 450+ crores at the box office ✨
Thank you for all the love and support!#PonniyinSelvan1 ????️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/XXAApSo2Ij
— Lyca Productions (@LycaProductions) October 19, 2022