எஸ்ஜே சூர்யாவின் அடுத்தப் படம் இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா .? டைட்டில் இதுதான்.!

Actor SJ Surya will next be paired with actress Yashika Anand in 'Do Duty'.

எஸ்ஜே சூர்யா அடுத்ததாக யாஷிகா ஆனந்த்ற்கு ஜோடியாக ‘கடமையை செய்’படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவி , மான்ஸ்டர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதனுடன் சிம்புவிற்கு வில்லனாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார் .’கடமையை செய்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தினை ‘முத்தின கத்தரிக்காய்’ பட இயக்குனரான வெங்கட் ராகவன் இயக்கவுள்ளார்.கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது .