அஜித்தின் 62-வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்குவதாகவும், அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. பிறகு விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் கணக்கில் ak62 என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை நீக்கினார்.
unknown nodeVignesh Sivan quits AK62 [Image Source: Twitter ]
இதனால் ‘AK62’ படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியது உறுதிப்படுத்த பட்டது. பிறகு ‘AK 62’ படம் பற்றி விக்னேஷ் சிவன் பேசாமல் இருந்தார். இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவனிடம் செய்தியாளர்கள் அஜித் படம் பற்றி கேள்வி கேட்டதற்கு சற்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.
unknown nodeVigneshShivan ANGRY [Image Source : Twitter]
சென்னையில் போதைப்பொருட்களுக்கு எதிரான ஆவணத் திரைப்பட போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவனிடம் செய்தியாளர் ஒருவர் அஜித் படம் என்னாச்சு..? என்று கேட்டார். இதற்கு சற்று கடுப்பான அவர் ” இது தேவையில்லை ஒரு கேள்வி, வேற கேள்வி கேளுங்க” என கூறியுள்ளார்.
unknown nodeVigneshShivan [Image Source : Twitter]
மேலும் மற்றோரு செய்தியாளர் ஒருவர் “அடுத்து ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் எடுக்கிறீர்களா என கேட்டார். அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் ‘இது irrelevant question’ என கூறியுள்ளார்.