தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும்.
unknown nodeஇவர் தற்போது நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார், நடிகர் சூரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை விஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
unknown nodeவழக்கம் போல் ராம் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
unknown nodeஇந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. புகைப்படத்தில் நிவின் பாலி மற்றும் சூரி ஸ்டைலிஷ் லுக்கில் உள்ளதால் ரசிகர்கள் இது இயக்குனர் ராம் திரைப்படம் தானா என ஆச்சிரியத்தில் பார்த்து வருகிறார்கள்.
unknown nodeunknown nodeunknown node