தமிழில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்திருந்த நானா படேகர் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
unknown nodeதனுஸ்ரீ தத்தா கூறிய புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அப்படி இருந்து நடிகை தனுஸ்ரீ தொடர்ந்து அதுகுறித்து குரல் எழுப்பி வருகிறார்.
இதையும் படியுங்களேன்-ஐயோ..பிக் பாஸ் போன நான் லூசு ஆயிடுவேன்…கதறும் ரேணுகா பிரவீன்.!
unknown nodeஅந்த வகையில், அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில், தான் மீடூ புகார் கூறிய பின்னர் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாக அவர் கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
unknown nodeஇது குறித்து அவர் பேசியதாவது,”என்னை கொலை செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடந்தது.. எனக்கு விபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் காரின் பிரேக்குகள் பல முறை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. ஒரு முறை விபத்தில் சிக்கி காயம் அடைந்தேன். எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்யவும் முயற்சிகள் நடந்தன” என மிகவும் பதட்டத்துடன் கூறியுள்ளார்.