பொறுப்பு இருக்கு...நல்ல டிரஸ் போட்டுட்டு வந்திருக்கலாம்... விஜய்க்கு பிரபல இசையமைப்பாளர் அட்வைஸ்.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் எளிமையான உடை அணிந்து மிகவும் எளிமையாக வருகை தந்திருந்தார். இந்நிலையில், விஜயின் தோற்றம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

unknown node

VarisuAudioLaunch [Image Source: Twitter / Sun Tv ]

இது தொடர்பாக அவர்  முகநூல் பக்கத்தில் கூறி இருபதாவது” ‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.

unknown node

Music Director James Vasanthan [Image Source: Twitter ]

அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?

unknown node

James Vasanthan About Vijay [Image Source: Twitter ]

நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள்.

unknown node

தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்” என பதிவிட்டுள்ளார். இவர் விஜையின் தோற்றம் குறித்து விமர்சித்துள்ளது தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.