நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டிருந்தார்.
unknown nodeshoba chandrasekhar varisu audio launch [Image Source : Twitter]
எனவே, விஜய் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தவுடன் ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு அங்கிருந்த பிரபலங்களுக்கு கை கொடுத்துவிட்டு ஒவ்வொருவரையும் கட்டியணைத்தார். ஆனால், அவருடைய தாயார் ஷோபா சந்திரசேகரை சரியாக பார்த்துகூட பேசவில்லை எனவே பல தரப்பில் இருந்து இதற்கு விமர்சனங்கள் எழுந்தது.
unknown nodeShoba Chandrasekar [Image Source : Twitter]
இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவம் குறித்து விஜய் தயார் ஷோபா சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விஜய் எங்களை எப்போதுமே ஒரு பெற்றோராக நன்றாக பார்த்து கொள்கிறார்.
unknown nodevijay and Shoba Chandrasekhar [Image Source : Twitter]
‘வாரிசு’ பட இசை வெளியீட்டு விழாவின் போது, அவர் தங்களை கண்டுகொள்ளவே இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், விஜய்க்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. அன்றைய நிகழ்ச்சி ரசிகர்களுக்கான நிகழ்ச்சி, எனவே, அவன் ரசிகர்களை திருப்திபடுத்தினால் மட்டும் போதும் என்றே நாங்கள் விரும்பினோம்” என தெரிவித்துள்ளார்.