அந்த அளவுக்கு சிறந்த பாடகர் இல்லை... இளையராஜா இசையில் பாட மறுத்த 'விடுதலை' நாயகி.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், உருவாகியுள்ள விடுதலை- 1 திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், உருவாகியுள்ள விடுதலை- 1 திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

unknown node

VIDUTHALAI 2 [Image Source : Twitter]

இந்த  விடுதலை திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் பவானி ஸ்ரீ தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

unknown node

ViduthalaiPart1 [Image Source : Twitter]

இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக பவானி ஸ்ரீ சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

unknown node

ViduthalaiPart1 [Image Source : Twitter]

அதில் பேசிய பவானி ஸ்ரீ ” நான் இசை குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் எனக்கு இசை மீது பெரிய ஆர்வம் இல்லை. எனது குடும்பத்தினர் என்னை வற்புறுத்தியும், நான் பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை. விடுதலை திரைப்படத்தில் இளையராஜா சார் என்னை ஒரு பாடலை பாடச்சொல்லி கேட்டபோது, நான் அந்த அளவுக்கு சிறந்த பாடகர் இல்லை என்று கூறி மறுத்து விட்டேன்” என கூறியுள்ளார்.