இன்னும் நிறைய கனவுகள் இருக்கிறது...40 வயதில் "யூத் ஐகான்" விருது பெற்ற தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு.!!

நடிகர் தனுஷிற்கு தக்ஷின் உச்சி மாநாட்டில்' யூத் ஐகான் விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தனுஷிற்கு வழங்கினார்.  விருதை

நடிகர் தனுஷிற்கு தக்ஷின் உச்சி மாநாட்டில்’ யூத் ஐகான் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தனுஷிற்கு வழங்கினார்.  விருதை வாங்கும்பொழுது மேடையில் தனுஷுடன் குஷ்பூ மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் தியாகராஜன் இருந்தார்.

unknown node

விருதை பெற்றுவிட்டு பேசிய நடிகர் தனுஷ் ” நான் இந்த யூத் ஐகான் விருதை 40 ஆவது வயதில் வாங்கியுள்ளேன். நான் இன்னும் சாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளது. . எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அதற்காக தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் கூட கனவு காண்கிறேன்.

unknown node

இந்த நேரத்தில் என்னுடைய பெற்றோர்களுக்கு நான் இந்த சமயம் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என கூறியுள்ளார். மேலும், யூத் ஐகான் விருது பெற்ற தனுஷிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

Captain Miller [Image Source: Twitter ]

மேலும், நடிகர் தனுஷ் தற்போது அருண்மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் நிறைய கனவுகள் இருக்கிறது...40 வயதில் "யூத் ஐகான்" விருது பெற்ற தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு.!!