அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

annapoorani nayanthara

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். 40 வயதாகியும் ஒரு நடிகை முன்னனணி நடிகையாக இருந்து வருகிறார் என்றால் அந்த பெருமை நயன்தாராவை தான் சேரும். ஏனென்றால், நடிகைகளுக்கு வயதாகி விட்டது என்றால் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து விடும். ஆனால், நயன்தாராவுக்கு அப்படி இல்லை திருமணம் முடிந்துமே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது.

நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அன்னபூரணி திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். படத்தில் நடிகர் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

எனக்கு அந்த நடிகரை மாதிரி இருக்கும் பசங்கள பிடிக்கும்! மனம் திறந்த திவ்யா துரைசாமி!

இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சம்பளமாக எவ்வளவு கோடி வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சம்பளமாக 10 கோடி வாங்கி இருக்கிறாராம். படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றபோதே தனக்கு இத்தனை கோடி சம்பளம் வேண்டும் என கேட்க அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவருக்கு சம்பளம் 10 கோடி கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

மேலும், மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிராராம். கடைசியாக அருண்ராஜா காமராஜ் கடைசியாக லேபிள் எனும் வெப் தொடரை இயக்கி இருந்தார். அந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில், அவர் நயன்தாராவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested