அடேங்கப்பா! தனுஷின் புது வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா.?

It has been reported that the value of Dhanush's new house is Rs 80 crore.

தனுஷ் புதிதாக கட்டும் வீட்டின் மதிப்பு ரூ.80 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் .

சமீபத்தில் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் அருகே தனுஷ் புதிதாக வீடு கட்டவுள்ளதாகவும் , அதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் ரஜினிகாந்த்,அவரது மனைவி லதா உள்ளிட்ட தனுஷின் குடும்பத்தினர் கலந்து கொண்டதுமான செய்திகளும், அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது .இந்த நிலையில் தற்போது தனுஷ் புதிதாக கட்டும் வீட்டின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு ரூ.80 கோடியாம் . தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.