இன்று வெளியாகும் "டிக்கிலோனா" படத்தின் பேர் வச்சாலும் பாடல்..!

Yuvan Shankar Raja will remake Ilayaraja's song Vachchalum Vaikkama in the movie Dikilona and it will be released today at 5 pm.

இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம பாடலை யுவன் ஷங்கர் ராஜா டிக்கிலோனா படத்தில் ரீ கீரியேட் செய்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது..நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் .

ரிலீஸ்க்கு தயாராகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார் . மேலும் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

இளையராஜாவின் ‘பேர் வச்சாலும் வைக்காம’ என்ற கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்திலுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா ரீ கீரியேட் செய்துள்ளார். இந்த அழகான பாடல் இன்று வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

இன்று வெளியாகும் "டிக்கிலோனா" படத்தின் பேர் வச்சாலும் பாடல்..!