தமிழுக்காக போராடும் ஜிவி பிரகாஷ்! மெய் சிலிர்க்க வைத்த 'ரெபெல்' டீசர்!

இசையமைப்பாளராக ஒரு பாக்கம் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான அடியே

Rebel Official Teaser

இசையமைப்பாளராக ஒரு பாக்கம் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான அடியே திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘ரெபெல்’  என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை நிகேஷ்.ஆர்.எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு, வெங்கடேஷ்.வி.பி, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்  தான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான டீசர் இன்று வெளியாகும் எனவும், அதனை சூர்யாவே வெளியிடுவார் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது படத்திற்கானடீசர்வெளியாகியுள்ளது.

டீசரில் தமிழுக்காக போராடி இறந்தவர் ஒருவர் இருக்கிறார் என்ற வசனம் வந்தவுடன் ஜிவி பிரகாஷ் வருகிறார். எனவே, டீசரை வைத்து பார்க்கையில் அவர் படத்தில் தமிழுக்காக போராடுபவராக நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த திரைப்படமும், ஜிவி பிரகாஷிற்கு வெற்றி படமாக இருக்கும் என தெரிகிறது.