அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வலிமை வில்லன்..!

Actor Karthikeyan has congratulated Ajith on his birthday on his Twitter page.

அஜித்திற்கு நடிகர் கார்த்திகேயா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று மே 1 ஆம் தேதியான உழைப்பாளர் தினத்தில் நடிகர் அஜித் தனது 50 வது பிறந்தநாளை வரும் கொண்டாடி வருகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜித், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலிப்பதற்குக் காரணம் அவரது கடின உழைப்பு தான். இவரது திரை வாழ்க்கை வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கொண்டது. அஜித் பிறந்த நாளைமுன்னிட்டு ரசிகர்கள் #HBDThalaAjith என்ற ஹேஸ்டேக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர். ரசிகர் மன்றம் இல்லாமல் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

இந்த நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் அந்த வகையில், வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா தனது ட்வீட்டர் பக்கத்தில் “சர்வதேச தொழிலாளர் தினத்தில் தலா அஜித் ஐயாவின் பிறந்த நாள்..ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு ஷாட்டிற்கும் அவர் செலுத்தும் கடின உழைப்பை எண்ணற்ற காயங்கள் மற்றும் அவர்களின் பணி தன்மையைப் பொருட்படுத்தாமல் அவர் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் மரியாதை ஆகியவற்றைப் பார்ப்பது முற்றிலும் நியாயமானது” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

unknown node