இவர் தான் என் திமிரான தமிழச்சி.. காதலியை அழகு தமிழில் அறிமுகப்படுத்திய தெருக்குறள் அறிவு.!

என்ஜாய்  எஞ்சாமி பாடலின் மூலம் ரசிகர்களை மனதை கொள்ளையடித்த தெருக்குரல் அறிவு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்,

என்ஜாய்  எஞ்சாமி பாடலின் மூலம் ரசிகர்களை மனதை கொள்ளையடித்த தெருக்குரல் அறிவு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பலர் படங்களின் பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்களும் ஹிட் என்று கூட கூறலாம்.

unknown node

Therukural Arivu [Image Source: Twitter ]

ஆனால், இவரை உலகம் முழுவதும் தெரிய வைத்த பாடல் என்றால் என்ஜாய் எஞ்சாமி பாடல் தான். இந்த பாடலை அவரே எழுதி சந்தோஷ் நாராயணன் இசையில் பாடாகி தீயுடன் இணைந்து பாடியிருந்தார். இவர் தற்போது பல பெரிய படங்களின் பாடல்களை எழுதி கொடுத்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்-அட்டகத்தி அஸீம்…பூமர் விக்ரமன்…டிவிட்டரில் அடித்துக்கொள்ளும் பிக் பாஸ் ரசிகர்கள்.!

unknown node

Therukural Arivu lover [Image Source: Twitter ]

இந்த நிலையில், தற்போது தனது காதலி யார் என்பதை தெருக்குரல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். காதலியுடன் எடுத்துக்கொண்ட முழு புகைப்படத்தை வெளியிடாமல் கால்கள் மட்டும் தெரியும் படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் ” என் திமிரான தமிழச்சி கல்பனா இனிமேல் எங்களுடைய பயணம் ஒன்றாக தொடரும்” என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Arivu (@therukural)

இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தனது காதலியின் முகத்தை அறிவு காட்டவில்லை என்றாலும் கூட, கல்பனாவின் ஐடியை டேக் செய்துள்ளதால் ரசிகர்கள் அந்த கல்பனா யார் என்பதை பார்க்க முடிகிறது. கல்பனாவின் இன்ஸ்டாவில் ஏராளமாக அறிவி குறித்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.