காடன் படத்தின் புதிய அப்டேட்.... நாளை வெளியாகும் "இதயமே" பாடல்..!!

The official announcement that the song 'Ithayame' featured in the film Cotton will be released tomorrow

காடன் படத்தில் இடம்பெற்றுள்ள இதயமே என்ற பாடல் நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த், அஸ்வின் ராஜா, சோயா ஹுசைன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான டிரைலர் கடந்த 3 ஆம் தேதி வெளியானது, வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதைபோல் படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக நாளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இதயமே என்ற பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node