வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து தற்போது, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் “வெந்து தணிந்தது காடு ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிகிறார்.
unknown nodeஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நிறைவடைந்ததையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாகவும், மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மும்பை செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.