பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. அதன்படி ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeponniyin selvan 2 [Image Source : Google ]
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படம் வெளியாக இன்னும் 1 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodePonniyinSelvan2 Audio & Trailer Launch Event [Image Source : Twitter]
அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னதாக படத்தின் டிரைலர் இரவு 9.30 மணிக்கு வெளியிடபடவுள்ளது. என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது விழாவில் கமல்ஹாசன் டிரைலரை வெளியிட்டுள்ளார்.
unknown nodeடிரைலர் பார்க்கையில் கண்டிப்பாக முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் அருமையாக இருக்கும் என தெரிகிறது. அந்த அளவிற்கு பிரமாண்ட காட்சிகள் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பிரமிக்க வைத்துள்ளது என்றே கூறலாம். டிரைலரை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக முதல் பாகத்தை போல மிகப்பெரிய வெற்றிபெறும் என கூறப்படுகிறது.