கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி கவின், அபர்ணா தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “டாடா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
unknown nodeDada box office [Image Source : Twitter]
விமர்சனத்தை போலவே படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தனையடுத்து, நேற்று படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
unknown nodeDadaSuccessMeet [Image Source: Twitter ]
இந்த விழாவிற்கு கவின், அபர்ணா தாஸ், கணேஷ் கே பாபு, தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய அம்பேத்குமார் “நிச்சயமாக கவின் சிவகார்த்திகேயனை போல வருவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘மனம் கொத்தி பறவை’ என்ற திரைப்படத்தை நான் தயாரித்தேன். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
unknown nodeAmbethkumar about kavin [Image Source: Twitter ]
அந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடத்திய அதே ஓட்டலில்தான் இப்போது ‘டாடா’ திரைப்படத்தினுடைய வெற்றி விழா நடத்துக்கிறோம்; நிச்சயமாக சிவகார்த்திகேயனை போல கவின் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கூறியுள்ளார்.