டான் திரைப்படத்தின் தாறுமாறான அடுத்த அப்டேட்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் வரும் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதனையடுத்து படத்திற்கான, டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம் . அதனை தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node