முறுக்கு மீசையுடன் ரஜினி இருக்கும் ஒரு புகைப்படம் அண்ணாத்த பட கெட்டப் என்று வைரலாகி வருகிறது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளத்தில் ரஜினியின் அண்ணாத்த கெட்டப் என்று ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால் இது அண்ணாத்த படத்தின் கெட்டப்பா என்பது உறுதியாக தெரியவில்லை. புகைப்படத்தில் முறுக்கு மீசையுடன் ரஜினி இருப்பதால் அண்ணாத்த பட கெட்டப் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்
unknown node