கிராபிக்ஸ் காட்சிகள் வேறலெவல் தான்...'வாடிவாசல்' படத்தில் இணைந்த 'அவதார்' படக்குழு.!

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாடிவாசல்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஜல்லிக்கட்டு கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது.

unknown node

Vaadivasal [Image Source : Twitter]

இந்த திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் ( ஓத்திகை காட்சி) கடந்த ஆண்டு நடைபெற்றது. படத்திற்கான குட்டி டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆனால், இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது..?

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் வெற்றிமாறனும் தற்போது விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

VaadiVaasal Update [Image Source : Twitter]

எனவே, விரைவில் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்து படம் வெளியாகிவிடும். அதற்குள் நடிகர் சூர்யாவும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து முடித்துவிடுவார். பிறகு வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

‘வாடிவாசல்’ படத்தில் இணைந்த ‘அவதார்’ படக்குழு

unknown node

Vaadivasal [Image Source : Twitter]

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் கிராபிக்ஸ் பணிகளுக்காக ‘அவதார்’, ‘மார்வெல்’ உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனம் WETA டிஜிட்டல் நிறுவனம் கைகோர்த்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது.