ஆடு ஜீவிதம் :தி கோட் லைஃப் என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டானது. மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் தமிழில்ஆடு ஜீவிதம்என்ற பெயரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படம் 2008 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான மலையாள நாவலான பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதத்தின் தழுவலாகும், இது மலையாளி குடியேறிய நஜீப்பின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.
82 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் பலரும் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி கடந்த சில மாதங்களாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஒரு வழியாக தற்போது ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி,ஆடு ஜீவிதம்படம் வரும் ஜூலை 19-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeAadujeevitham [file image]
