வலிமை வில்லனின் "வெறித்தனமான" லுக்... இணையத்தில் வைரல்..!

A photo of Karthikeyan in a threatening look as the villain of the movie Strength has gone viral on a social networking site.

வலிமை படத்தின் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயாவின் மிரட்டலான தோற்றத்தில் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

மேலும் வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டத்திலிருந்து ஒரு அப்டேட் கூட விடாததால் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில் வலிமை படத்தின் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயாவின் மிரட்டலான தோற்றத்தில் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node