புஷ்பா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு.!

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனரான சுகுமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தேவ ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், புஷ்பா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பாடல் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி  கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node