நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் முதல் நாள் வசூல்..?

The film has grossed Rs 34 lakh in Chennai Nenjam Marappathillai movie first day of its release.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும்  34 லட்சம் வசூல் செய்துள்ளது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி நேற்று வெளியானது. வெளியான முதல் நாளாகவே மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சிலர் கிளைமாக்ஸ் காட்சி சரியில்லை என்றும் சிலர் செல்வராகவன் மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது, வெளியான முதல் நாளில் சென்னையில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் 34 லட்சம் வசூல் செய்துள்ளது.