மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்...!!

The dubbing of the conference film starring Simbu has started today with Pooja.

சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணிகள்  இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற மே 12 ஆம் தேதி ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடக்கப்பட்டுள்து. இதனை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node
மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்...!!