இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை வித்யா பாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது ” நான் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆனேன். அந்த விளம்பர படத்தை இயக்கம் அந்த இயக்குனர் சென்னையில் என்னை நேரில் பார்க்கவேண்டும் என்று கூறினார். அவரை நானும் நேரில் சென்று இருந்தேன். பிறகு, அந்த இயக்குனர் மறுநாள் என்னை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்னார் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்ததது.
unknown nodeVidya Balan [Image Source : Twitter]
இதுவரை நான் சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இதுவரை படுக்கைக்கு அழைத்த இயக்குனரை நான் சந்தித்தது இல்லை எனவே, அவரிடம் சுதாரிப்பாக இருக்க முடிவு செய்தேன். பிறகு அந்த இயக்குனரின் அறைக்கு சென்று கதவை அடைக்காமல் திறந்து வைத்திருந்தேன்.
unknown nodeVidya Balan [Image Source : Twitter]
இது அந்த இயக்குனருக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது. நான் கதவை திறந்து வைத்துக் கொண்டே அவரிடம் விளம்பர படத்தை பற்றி அதிகமாக பேசிக் கொண்டிருந்ததால் அவரால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியவில்லை.பிறகு அந்த இயக்குனரே சில மணி நேரத்தில் வெளியே சென்றுவிட்டார்.
unknown nodeVidya Balan [Image Source : Twitter]
நான் இதன் காரணமாகவே அந்த விளம்பர படத்தில் இருந்து நடிக்காமல் வெளியேறி விட்டேன். பாலிவுட் சினிமாவை பொருத்தவரை எனக்கு படுக்கைக்கு அழைக்கும் சம்பவமே நடைபெறவில்லை. எனவே நான் அதில் அதிர்ஷ்டசாலி தான் என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.