நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
unknown nodeVarisu [Image Source: Twitter ]
படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு வாரிசு திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார்.
unknown nodeVarisu [Image Source: Twitter ]
இந்த நிலையில், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ” வாரிசு ” வெளியீடு தேதியை, பிரிட்டனில் விநியோகம் செய்யும் அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Let’s get ready for #VarisuPongal ????
UK release by #AhimsaEntertainment ????
12.01.23 ????@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_official @TeamDreamZE @cineworld @ODEONCinemas @vuecinemas @ShowcaseCinemas #Varisu #Vaarasudu @ahimsafilms pic.twitter.com/D0O1wayjGs
— Ahimsa Entertainment (@ahimsafilms) November 30, 2022
இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். விரைவில் படத்திற்கான அடுத்த பாடல் குறித்த அப்டேட்டும் , டிரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.