ரசிகர்களுடன் இணைந்து மாஸ்டர் படம் பார்த்த படக்குழுவினர் ! எந்த தியேட்டரில் தெரியுமா?

The master crew watched the film with the fans at the Rohini Theater in Chennai. They also had Selby with them.

மாஸ்டர் படக்குழுவினர் சென்னை ரோகினி தியேட்டரில், ரசிகர்களுடன் இணைந்து  பார்த்துள்ளனர். மேலும் அவர்களுடன் இணைந்து செல்பியும்  கொண்டனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் தமிழகம் முழுவதும் 800 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகன் ஆகியோர் மாஸ்க் அணிந்து, ரோகிணி தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் இணைந்து படத்தை கண்டுகளித்துள்ளனர். மேலும் அவர்களோடு இணைந்து படம் பார்த்ததோடு மட்டுமல்லாமல், அவர்களோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.