ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!!

The crew has now released a new poster for the RRR film.

ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டரை தற்போது  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

unknown node