மாநாடு திரைப்படம் செமயா இருக்கும்- எஸ் ஜே சூர்யா..!

SJ Surya has said that the conference film will be a different level

மாநாடு திரைப்படம் வேற லெவெலா இருக்கும் என்று எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இந்த மாதம் முதல் நடைபெற இருப்பதும், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாநாடு படத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ” நாணும் சிம்புவும் மாநாடு படத்தில் ஒன்றாக வரும் காட்சி செம கெத்தாக இருக்கும் என்றும், மாநாடு திரைப்படம் வேற லெவெலா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மாநாடு திரைப்படம் செமயா இருக்கும்- எஸ் ஜே சூர்யா..!