அந்த சம்பவம் பயங்கரமானது.! அபர்ணாவிடம் அத்துமீறிய நபர்.. கொந்தளித்த சின்மயி.!

நேற்று நடிகை அபர்ணா பாலமுரளி தான் நடித்துள்ள தங்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினருடன்  கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது

நேற்று நடிகை அபர்ணா பாலமுரளி தான் நடித்துள்ள தங்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினருடன்  கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் மேடையில் ஏறிய நடிகை அபர்ணாவுக்கு பூ ஒன்றை கொண்டு வந்து கொடுக்க முயன்றார்.

பிறகு, பூவை கொடுத்துவிட்டு கை கொடுத்து புகைப்படம் எடுக்க அபர்ணாவை இழுத்தார். பிறகு தோளில் கையை போட முயன்றார். பிறகு அப்டியே அபர்ணா நழுவினார். இந்த சம்பவம் அபர்ணாவுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் கோபத்தை வெளியில் காமிக்காமல் சிரித்துக்கொண்டே விட்டுவிட்டார்.

இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைராகி வரும் நிலையில், இது குறித்து ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பாடகி சின்மயி தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ” இந்த சம்பவம் சட்டக்கல்லூரியில் நடந்துள்ளது. இந்த மனிதன் எப்படி அபர்ணா பாலமுரளியிடம் பேச அனுமதிக்கப்படுகிறான் என்பது நம்பமுடியாதது. இது பயங்கரமானது” என பதிவிட்டுள்ளார்.

unknown node
அந்த சம்பவம் பயங்கரமானது.! அபர்ணாவிடம் அத்துமீறிய நபர்.. கொந்தளித்த சின்மயி.!