இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் இருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் படத்தின் இரண்டாவது பாடலான “மதுர வீரன் அழகுல” என்ற பாடலை யுவன் – அதிதி இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள். பாடலும் மிகவும் அருமையாக இருந்தது.
unknown nodeஆனால், இந்த பாடலை அதிதி ஷங்கருக்கு முன்னதாக சூப்பர் சிங்கர் பிரபலம் பாடகி ராஜலட்சுமி பாடினார் என்றும் ஷங்கரின் மகள் என்பதால் ராஜலட்சுமியை நீக்கிவிட்டு அதிதியைப் பாடவைத்துவிட்டார்கள் என்று பலரும் அதிதியை விமர்சித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்-கைதி 2 அப்டேட் கேட்டவர்களுக்கு தளபதி 67 கொடுத்த கார்த்தி.! ரகசியத்த இப்படி போட்டு உடைச்சிட்டிங்களே சார்….
unknown nodeஇது தொடர்பாக ராஜலட்சுமி பேசியுள்ளார் அதில் “‘மதுரவீரன்’ பாட்டை நான் பாடினது உண்மைதான். அதிதி ரொம்ப நல்லா பாடுறாங்க. அதனால, அந்த பாடலை பாட வச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதா நினைச்சிட்டு அதிதியை தொடர்ந்து விமர்சிக்கிறது எனக்கு ரொம்ப… ரொம்ப… வருத்தமா இருக்கு. எனக்கு எந்த வருத்தமும் , கோபமும் இல்லை.
unknown nodeபொதுவா எல்லா இசையமைப்பாளர்களும் பாட்டை ரெக்கார்டிங் பண்ணும்போது நிறைய பாடகர்களைப் பாடவச்சிப் பார்ப்பாங்க. இது இயல்பா எப்பவும் நடக்குற விஷயம். அந்தக் கதைக்கு யாரோட குரல் கனகச்சிதமாக இருக்கிறதோ அவங்களைத்தான் தேர்வு செய்வாங்க. இப்படி ரொம்ப எதார்த்தமா நடக்குற விஷயத்தை பெரிசுப்படுத்தணும்னு அவசியமில்லை.
unknown nodeநமக்கு ஒரு படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தா பாடிட்டு வரணும். அந்த பாட்டு ரிலீஸ் ஆகுமா, ஆகாத என்று கேக்குறது நாகரீகமான அணுகுமுறை இல்லை. எனக்கு இது ஒரு அனுபவம். என் குரல் இப்படித்தான் இருக்கும்னு யுவன் சார்கிட்ட பதிவு பண்ணிட்டேன். அதுவே, பெரிய விஷயம். அதுவே போதும்” என தெரிவித்துள்ளார்.