அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி – நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்ட நக்ஷத்ரா!

Nakshatra has posted her official engagement photos on her website, thanking everyone who congratulated her.

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி எனக்கூறி, தனது அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நக்ஷத்திரா.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாகிய நக்ஷத்ரா ஜோடி நம்பர் 1 எனும் நிகழ்ச்சியில் பலருக்கும் அறிமுகமானவர். அதன்பின்பு, வாணி ராணி எனும் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமாகினர். அதனை தொடர்ந்தும் லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட பல சீரியலில் நடித்த இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் எனும் சீரியலிலும் நடித்து உள்ளார். இந்நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் படத்திலும் சில முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவருக்கு ஒரு காதலர் இருக்கிறார் எனும் செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலமாக நக்ஷத்ரா தெரிவித்திருந்தார். இதனையடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகி இருக்கும் புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி என குறிப்பிட்டு, இருவரும் சேர்ந்து நிச்சயதார்த்த மோதிரங்களை கையில் வைத்திருக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போதும் ரசிகர்களும் பல நடிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,

unknown node