மீண்டும் இணையும் 'தாமிரபரணி' கூட்டணி..! விஷாலின் தரமான கம்பேக் லோடிங்...!

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனத்தை பெறவில்லை. அதுபோல் அதற்கு முன்பும் விஷால் நடிப்பில் வெளியான படங்களும்

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனத்தை பெறவில்லை. அதுபோல் அதற்கு முன்பும் விஷால் நடிப்பில் வெளியான படங்களும்  பெரிதளவு பேசப்படவில்லை.  இதனால் மீண்டும் ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுவேண்டும் என்ற நோக்கில் விஷால் இருக்கிறார்.

unknown node

MarkAntony [Image Source: Twitter]

அந்த வகையில், தற்போது  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி  எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

Hari vishal [Image Source : Google ]

இதற்கிடையில், புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக வருகிறது. அது என்னவென்றால், விஷால் இயக்குனர் ஹரி  இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான தாமிரபரணி ,பூஜை ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று விஷாலின் மார்க்கெட்டை உயர்த்தியது.

unknown node

Hari vishal [Image Source : Google ]

இதனை தொடர்ந்து,  தற்பொழுது இந்த படங்களின் வெற்றிகளை தொடர்ந்து விஷால் மற்றும் இயக்குனர் ஹரி இணைந்து ஒரு படம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளது. எனவே கண்டிப்பாக இது விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும்  கடைசியாக இயக்குனர் ஹரி அருண் விஜய்யை  வைத்து யானை என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.