தளபதி 66 படத்தை இயக்க காத்திருக்கும் இயக்குனர்கள்...?

It has been reported that Vijay's 66th film will be directed by H. Vinod, Ajay Gyanamuthu, Lokesh Kanagaraj and Aadli.

விஜயின் 66 வது திரைப்படத்தை எச்.வினோத், அஜய் ஞானமுத்து, லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகிய 4 இயக்குனர்கள் ஒருவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தினை இயக்க போவது யார் என்ற‌ கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில் தளபதி விஜயின் 66 வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டாதாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய்யின் 66 வது திரைப்படத்தை எச்.வினோத், அஜய் ஞானமுத்து, லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகிய 4 இயக்குனர்கள் இயக்க காத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இயக்குனர்களில் நடிகர் விஜய் எந்த இயக்குனரை தேர்ந்தெடுப்பார் என்பதை பொறுத்திருந்துபார்ப்போம்.