ஜூன் மாதத்திற்கு தள்ளி செல்லும் தளபதி 65 படப்பிடிப்பு..??

It has been reported that the second phase of shooting for thalapathy65 will begin in June

தளபதி 65 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தனர்.

இந்நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கி செட் அமைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பை படக்குழு ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.