மார்க் ஆண்டனி டீசரை பார்த்த தளபதி விஜய்...நன்றி தெரிவித்த விஷால்.!! வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு.!!

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ்.

vishal and vijay

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ். ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு  தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

MarkAntonyTeaser [Image Source : Twitter/@VishalKOfficial]இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், விஷால் “மார்க் ஆண்டனி ”  பட குழுவினருடன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்கள். படத்தின் டீசரையும், விஜய் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.

unknown node

விஜய்யை சந்தித்த புகைப்படங்களை விஷால் தனது டிவிட்டரில் வெளியீட்டு ” என் அன்பு சகோதரன் & ஹீரோ விஜயை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய மார்க் ஆண்டனி  பார்த்ததற்கு மிக்க நன்றி… உங்கள் ரசிகராக இருப்பதில் எப்போதும் பெருமைப்படுகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவி தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node

மேலும் ஏற்கனவே, இதற்கு முன்பு விஷால் டிட்டர் பக்கத்தில் தளபதி விஜய்  மார்க் ஆண்டனி என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும்  “மார்க் ஆண்டனி ” படத்தின்  டீசர் விஜய் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

unknown node