வாரிசு திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
unknown nodeVarisu [Image Source: Twitter]
படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது வாரிசு திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.
unknown nodeVarisu [Image Source: Twitter ]
எனவே தமிழில் வாரிசு என்று தலைப்பும், தெலுங்கில் வாரிசுடு என்ற தலைப்பும் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது படம் ஹிந்தியிலும் வெளியாகவுள்ளதால் ஹிந்தியில் என்ன தலைப்பாக இருக்கும் என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விரைவில் அதற்கான தலைப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்-திரையரங்குகளை அதிர வைத்த “லவ் டுடே” திரைப்படம் OTT-யில் எப்போது வெளியாகிறது தெரியுமா..?
unknown nodeSTR singing VarisuSecondSingle [Image Source: Twitter ]
மேலும், படத்திலிருந்து முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிம்பு வாரிசு படத்தின் இரண்டாவது பாடலை பாடியுள்ளதாகவும், அந்த பெப்பியான பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.