தளபதி 66 மெர்சல் 2...? உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்... !

It has been reported that director Aadli is directing Vijay's 66th film and it is likely to be the second part of the Mersal film.

விஜயின் 66 வது திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயங்குவதாகவும் அது மெர்சல் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இதனை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தினை இயக்க போவது யார் என்ற‌ கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தளபதி 66 குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது தளபதியின் 66வது படத்தினை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்த படத்தை இயக்குனர் அட்லீ இயங்குவதாகவும் அது மெர்சல் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.