சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் தளபதி பட வில்லன்.?

Actor and director SJ Surya is all set to star in Sivakarthikeyan's upcoming film Don

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . தற்போது இரண்டு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருவதை தொடர்ந்து அவரது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதாவது அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தினை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டான் படத்தில் முன்னணி நடிகரும் ,இயக்குனருமான ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.