விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில், விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
unknown nodeThalapathy 67 Shooting Today [Image Source: Twitter ]
ஆம், நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “தளபதி 67 ” என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
unknown nodeThalapathy 67 Poojai Done [Image Source: Twitter ]
படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeLokesh Kanagaraj [Image Source: Twitter ]
எப்போது தான் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் ” தளபதி 67 அப்டேட் இன்னும் 10 நாட்களில் வந்துவிடம். படப்பிடிப்பு போய் கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.