நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
unknown nodethalapathy 67 update [Image Source : Twitter]
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தரமான கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அடுத்த சில மணி நேரங்களுக்கு தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள முக்கிய பிரபலங்கள் குறித்த அறிவிப்பை வெளியீட்டு வருகிறது.
unknown nodeஅந்த வகையில், முதல் அறிவிப்பாக தளபதி 67 படத்தில் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக படத்தில் பிரபல நடிகையான பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.