மாஸான லுக்கில் விஜய்.! அசத்தலான அப்டேட் தளபதி 66 கொடுத்த படக்குழு...

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இந்த படம் விஜயின் 66-வது படம் என்பதால், படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இந்த படம் விஜயின் 66-வது படம் என்பதால், படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது படத்திற்கான, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் இளமையான லுக்கில் இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பது குறிபிடத்தக்கது.

unknown node