தளபதி 65 படத்திற்கு வந்த புதிய சோதனை..!!

Filming for thalapathy 65 has been put on hold due to heavy cold and heavy rains in Georgia

ஜார்ஜாவில் குளிர் மட்டும் கனமழை பெய்து வருவதால் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம் தேதி ஜார்ஜாவில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் ஜார்ஜாவில் குளிர் மட்டும் கனமழை பெய்து வருவதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தளபதி 65 படத்திற்கு வந்த புதிய சோதனை..!!