தலைவர் 169..? வீண் வதந்திகளை பரப்பாதீர்கள் – இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.!

தலைவர் 169 குறித்து வதந்தியான விஷயங்களை வெளியிட வேண்டாம் என்று இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

தலைவர் 169 குறித்து வதந்தியான விஷயங்களை வெளியிட வேண்டாம் என்று இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. முதல் திரைப்படமே வெற்றி திரைப்படமாக அமைந்தது, இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் மேலும் சில சினிமா பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். அடுத்ததாக பெரிய பெரிய நடிகர்களின் படங்களை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக தகவல்கள் பரவி வருகிறது.

அந்த வகையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். அப்போதிலிருந்து தற்போதுவரை ரஜினியின் 169- வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில், ட்வீட்டர்கள் சிலர், ரஜினியின் 169 படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அவரே கூறிவிட்டார் என்று வதந்தி செய்திகளை வெளியிட்டினர். இதனை பார்த்த இய்குனார் தேசிங்கு பெரியசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் ” வதந்தியான விஷயங்களை வெளியிட வேண்டாம். தயவுசெய்து மக்களை கேட்டுக்கொள்ளுங்கள். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

unknown node

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்த சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த  திரைப்படம் வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. விரைவில் ரஜினியின் 169 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.